தமிழகம்

SDPI கட்சி தேனி மாவட்ட செயற்குழு கூட்டம்

131views
SDPI கட்சி தேனி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் H.அபுபக்கர் சித்திக் தலைமையில் உத்தமபாளையத்தில் இன்று 10.12.2022 அன்று SDPI கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.கூட்டத்தின் துவக்கமாக கம்பம் சட்டமன்ற தொகுதி செயலாளர் அமு சையது இப்ராகிம் அவர்கள் வரவேற்புரையுற்றினார்.இக்கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைப்பெற்று பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன்.
தீர்மானங்கள் :
1.வருகின்ற 17.12.2022 அன்று SDPI கட்சியின் தேனி மாவட்ட பொதுக்குழு நடத்துவது என்றும் இதில் அனைத்து கிளை,நகர, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொள்வதும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது
2. தேனி வீராபான்டி அருகே அமைந்திருக்கும் சுங்கச்சாவடிகளில் தேனி மாவட்டம் வாகனங்களுக்கு வரி வசூல் விலக்கு அளிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
இக்கூட்டத்தில் SDPI மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி மாவட்ட துணைத்தலைவர் ஷாகின் SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் தமிமுல்அன்சாரி ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் MM அஜ்மீர்கான் Wim மாவட்ட பொதுச்செயலாளர் ஜெரினா பேகம் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இறுதியாக SDPI கட்சி மாவட்ட செயலாளர் ஜாவித் அகமது அவர்கள் நன்றியுரையாற்றினார்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!