தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளதால் , அதனை அகற்றக்கோரி, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், இது தொடர்பாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி – யை சந்திக்க ஏற்பாடு.

102views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிலையில், நெடுஞ்சாலை துறையின் விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளது என்பது அறிந்ததே.
இந்த நிலையில் உள்ளூர் வாகனங்களுக்கு அவ்வப்போது கட்டண விலக்கு அளித்து வந்தது. இந் நிலையில், சுங்கச்சாவடி நிர்வாகம் தற்போது உள்ளூர் வாகனங்களுக்கும் ரூபாய் 300 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்ததால், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் பல்வேறு போராட்டங்கள், வாக்குவாதங்கள், முற்றுகை, உண்ணாவிரதம், மறியல் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில்,
நேற்று மதுரை வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைத்துக் குழு, இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மனு அளித்துள்ளனர். அதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தனர்.
இந்த நிலையில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் சுங்கச்சாவடியை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி – யை சந்திக்க சுங்கச்சாவடி எதிர்பார்ப்பு குழுவினருடன் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர் .
இந்த நிலையில் நான்கு வழி சாலை ஓரத்தில் , பொதுமக்கள் சொந்த நிலத்தில் அவர்கள் கட்டிடம் கட்டவும், குடியிருப்புகள் கட்டவும் , சுங்கச்சாவடி நிர்வாகம் அனுமதிக்காமல் மிரட்டி வருவதுடன், குண்டல்களை வைத்து வசூல் செய்வதாகவும் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!