தமிழகம்

காரியாபட்டி அருகே, போலீஸ்காரரின் இருசக்கர வாகனம் திருட்டு

118views
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள தீயனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (35). இவர் விருதுநகர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தில் தீயனூரில் உள்ள வீட்டிற்கு முத்து வந்துள்ளார். தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகில் நிறுத்தியிருந்தார்.
இரவு வீட்டில் தங்கிவிட்டு காலையில் வேலைக்குச் செல்வதற்காக புறப்பட்ட போதுதான், வீட்டின் அருகில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து முத்து, நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம். மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!