தமிழகம்

கோவை செல்வராஜ் தன்னுடைய சுயநலத்திற்காக திமுகவிற்கு சென்றுள்ளார்.இதனால் எங்களுக்கு பாதிப்பில்லை என ஒபிஎஸ் ஆதரவளாரான உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கருத்து.

294views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 22வது வார்டில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தின் பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தொடங்கி வைத்தார்.பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோவை செல்வராஜிற்கு தலைமை நிலையச் செயலளர் என்னும் பதவி கொடுத்து அண்ணன் ஒபிஎஸ் அழகு பார்த்தார்.ஆனால் செல்வராஜ் கோவை மாவட்டத்திற்குள் என்னைக் கேட்காமல் எதுவும் நடக்க கூடாது என ஒபிஎஸ் உடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனால் அவர் திமுகவிற்கு சென்றுள்ளார். கோவை செல்வராஜ் திமுகவிற்கு சென்றதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.அவர் தன்னுடைய சுயநலத்திற்காக திமுகவிற்கு சென்றுள்ளார்.இதனால் எங்களுக்கு பாதிப்பில்லை என ஒபிஎஸ் ஆதரவளாரான உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கருத்து தெரிவித்தார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!