தமிழகம்

மூன்று மாணவிகளை மருத்துவ படிப்பிற்கு முன்னேற்றிய மற்றும் ராக்கெட் ஏவுகணை மூலப் பொருட்கள் தயாரிப்பிற்கு உதவி செய்த மூன்று மாணவிகளை பாராட்டிய அரசு பள்ளிக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கிய தமிழக அரசுக்கு பள்ளியின் நிர்வாகம் நன்றி தெரிவிப்பு.

147views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , சிறந்த அரசு மேல்நிலைப் பள்ளியாக தேர்வு செய்து , தமிழக அரசு அதன் தலைமை ஆசிரியர் கர்ணனுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் ,மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் மற்றும் தனித்திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு கருவிகள் மற்றும் ஆய்வகம் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளதற்கு , பள்ளி நிர்வாகம் தமிழக அரசுக்கும் , தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும், கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!