தமிழகம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் அதிமுகவினர் அஞ்சலி

131views
தமிழக முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ராமநாதபுரம் பாரதி நகரில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் ஆர்.தர்மர் எம்பி தலைமையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலர் வழக்கறிஞர் முத்து முருகன், ராமநாதபுரம் கிழக்கு நகர் செயலர் எம் பாலசுப்ரமணியன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், திருப்புல்லாணி ஒன்றிய செயலர்கள் உடைய தேவன், சரவணன், மண்டபம் ஒன்றிய செயலர்கள் சிவகுமார் ( பெருங்குளம் ஊராட்சி தலைவர்), சீனிமாரி, அழகர், திருவாடனை ஒன்றிய செயலர் கே கே பி பாண்டி, ஆர் எஸ் மங்கலம் ஒன்றிய செயலர் நந்திவர்மன், முதுகுளத்தூர் ஒன்றிய செயலர் எஸ் டி செந்தில்குமார் (வெங்கலகுறிச்சி ஊராட்சி தலைவர்), கடலாடி ஒன்றிய கழகச் செயலர் சண்முக பாண்டியன், கமுதி ஒன்றிய செயலர் வாசுதேவன், கருப்பு சட்டை முருகேசன் நயினார் கோவில் ஒன்றிய செயலர் ரஜினிகாந்த், மாவட்ட விவசாய பிரிவு செயலர் மாரிமுத்து, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலர் சக்தி, மாவட்ட மகளிர் அணி செயலர் சபீனா பேகம், மாவட்ட கவுன்சிலர் கற்பகவள்ளி, ராமேஸ்வரம் நகர் செயலர் ராமநாதன், பரமக்குடி நகர் செயலர் வின்சென்ட் ராஜா, மண்டபம் பேரூர் செயலர் யா சி நாசர் ஷா உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!