தமிழகம்

திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் 8 அடி நீளகருஞ்சாரை பாம்பு பிடிபட்டது.

157views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரையொட்டி , சில பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக அங்கு வந்த ஒரு சில வழக்கறிஞர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில்,  மதுரை திருநகரில் உள்ள பாம்பு பிடிக்கும் சமூக சேவகர்கள், உடனடியாக நீதிமன்ற வளாகத்தை சுற்றியுள்ள சுவர்களில் இருந்து 8 அடி நீள கருஞ்சாரை பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர் .மேலும் சில பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.  நேற்று  விடுமுறை தினம் என்பதால், பொதுமக்கள் நடமாட்டம் இன்மையால், பாம்புகள் வெளியில் நடமாடி வருவதாக கூறப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!