Uncategorizedதமிழகம்

உசிலம்பட்டி அருகே வலையபட்டி கிராமத்தில் இடி விழுந்து இரண்டு பசு மாடுகள் உயிர் இழப்பு.

172views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகயளில் இன்று மதியம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பெய்த மழை பெய்தது .இந்நிலையில் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட வலையபட்டி கிராமத்தில் ஆதி முத்து மகன் காசி சொந்தமான இரண்டு பசு மாடுகள் மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இடி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தது. இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து மாட்டு உரிமையாளர் அரசு இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!