தமிழகம்

தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம் கவேஅ. மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தின் மூலமாக கலைத்திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றது.

850views
எரச சக்கநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி கலை நிர்வாக குழு உறுப்பினர்கள்,அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார வள மேற்பார்வையாளர், வட்டார வள மைய கல்வி அலுவலர்கள், அய்யம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் நகராட்சி மெயின் ரோடு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரால் கலைத்திருவிழா நிகழ்வானது துவக்கி வைக்கப்பட்டது.
நடைபெற்ற கலை திருவிழாவில் கலை நிகழ்வுகளாக அரசு பள்ளி மாணவ மாணவிகள் பல விதமான போட்டிகளில் பங்கேற்று சிறப்பித்தனர்.
நவ.30 அன்று,  போட்டியின் முதல் நாள் நிகழ்ச்சியாக அனைத்து அரசு நடு,உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் 6 முதல் 8 வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு சின்னமனூர் கவேஅ. மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

கலைத்திருவிழா போட்டிகளின் நடுவர்களாக பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செயல்பட்டனர்.
இப்போட்டிக்கான இட ஏற்பாடுகளை கவேஅ.மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை சிறப்பாக செய்து கொடுத்தார்.
சின்னமனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் போட்டிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கொடுத்தனர்.
போட்டியில் ஆசிரியர் பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள்,இல்லம் தேடி கல்வி ஆசிரியர் மற்றும் பல பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

இக்கலைத் திருவிழா போட்டிகளில் சின்னமனூர் வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறவிருக்கக் கூடிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து டிச.01 அன்று அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 மற்றும்10 வகுப்பு மாணவர்களுக்கு சின்னமனூர் சிவகாமி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடைபெறும் எனவும், டிச.02 அன்று அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும்  11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு சின்னமனூர் சிவகாமி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடைபெறும் எனவும் சின்னமனூர் வட்டார வள மையம் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!