தமிழகம்

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவு

146views
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், இராஜபாளையம் சிவகாசி,அருப்புக்கோட்டை,ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் கனமழையினால் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பாதுகாப்பு கருதி மாவட்டம் முழுவதுமுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!