தமிழகம்

பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பழங்கள், பிரட், பிஸ்கட், போன்றவை வழங்கினர்.

292views
தமிழீழ விடுதலைப் புலிகள்uuh இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26-ந் தேதி இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற நாம் தமிழர் கட்சியின் சார்பாக, கட்சியின் முன்னாள் தொகுதி தலைவரும் நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவருமாகிய சங்கிலி பாண்டியன் தலைமையில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நோயாளிகளை சந்தித்து பழங்கள், பிரட், பிஸ்கட், போன்றவைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணியின் தொகுதி பொறுப்பாளர் ஜெயக்குமார், வீரமணி, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் இளைஞர் அணி பொறுப்பாளர் முத்துப்பாண்டி, நிலக்கோட்டை பேரூராட்சி பொறுப்பாளர் சங்கிலி பாண்டியன் மற்றும் கருப்பையா, யோகேஸ்வரன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி பொருட்கள் வழங்கிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரையும் தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் அனைவரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.
செய்தியாளர் : வி. காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!