தமிழகம்

கிராம மக்கள் ஆவேசத்துடன் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்.

149views
திருமங்கலம் அருகே உரிய நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை தங்களது கிராமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அரசு நகர்ப் பேருந்து முன்கூட்டியே வந்ததால் , கிராம மக்கள் ஆவேசத்துடன் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே T. கொக்குளம் கிராமத்தைச் சார்ந்த கிராம மக்கள் , அரசு நகர் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 நிமிடத்திற்கு பிறகு , அரசு நகர்ப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உரிய நேரத்தில் வருவதாக உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தை கைவிட்டனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து , திருமங்கலம் அருகே உள்ள திருமால் வழியாக புதுப்பட்டிக்கு வர வேண்டிய அரசு நகர் பேருந்து , மாலை 4 மணிக்கு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து புதுப்பட்டிக்கு வரக் கூடிய மாணவிகளை ஏற்றுக் கொண்டு வர வேண்டிய அரசு நகர் பேருந்து, முன்கூட்டியே மாலை 2 மணிக்கு பயணிகளின்றி வந்ததால் , தங்களது பிள்ளைகளை, உரிய நேரத்தில் அரசு பேருந்தில் ஏற்றுக் கொண்டு வராமல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால் ஆவேசமடைந்த கிராம மக்கள் , நகர் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 நிமிடத்திற்கு பிறகு அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் நாளை முதல் உரிய நேரத்தில் வருவதாக உறுதி அளித்த பேரில் போராட்டம் கைவிடப்பட்டன.
இதனிடையே மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசு நகர் பேருந்து , பிரேக் பிடிக்காததால் கப்பலூர் அருகே நின்ற காரின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அரசு நகர் பேருந்தில் வந்த பயணிகள் 20 நிமிடத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், பேருந்து ஓட்டுனர், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!