தமிழகம்

ராமநாதபுரத்தில் உலக மீன்வள தினம்

190views
உலக மீன்வள தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மீன் வளர்ப்பு, சுற்றுச்சூழல், துறைமுக மேலாண் குழு, கடல் ஓடு கைவினை பொருள்கள் உற்பத்தி சுய உதவிக்குழு, கடல்வள பாதுகாவலர் ஆகியோருக்கு கேடயம் வழங்கினார்.
கடற்கரை தூய்மை பணி க விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர்கள் கோபிநாத், ராஜதுரை, மாணிக்கம், அப்துல்காதர் ஜெய்லானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!