அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் உயிரோடு இருக்கமாட்டார்கள் அல்லது ஜெயிலுக்கு செல்வார்கள் செல்லூர் ராஜு அண்ணனை போன்று 2500 பேர் கொண்ட EPS அணியில் 2000 நபருக்கு அந்த எண்ணம் உள்ளது. அவர் உடல் தான் அங்கு உள்ளது உயிர் ஓபிஎஸ் பக்கம் உள்ளது – மதுரை Ex MP கோபாலகிருஷ்ணன் பேட்டி
180views
மதுரை மாநகர் அவனியாபுரம் செம்பூரணி சாலையில் அமைந்துள்ள தனியார் மகாலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான கோபாலகிருஷ்ணன்., மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன் ஆகியோர் தலைமையில் புதிய நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கோபாலகிருஷ்ணன் கூறுகையில், எம்ஜிஆரை – அம்மாவை எதிர்த்து., துரோகத்தின் வழியில் எடப்பாடி பின்னால் சென்றுள்ள மாவட்ட செயலாளர் ஆர்பி.உதயகுமார் இழுத்து செல்லும் நபர்கள் அனைவரும் ஒன்று ஜெயில் அல்லது இறப்பு தான் இது துரோக வரலாறு. EPS இருக்க மாட்டார் அல்லது அதிமுகவில் இருக்க மாட்டார். துரோக வரலாறு யாரையும் விட்டுவைக்காது.அதிமுகவில் ஒரு ஆன்மிக சக்தி உள்ளது., இது மனிதனால் உருவானது அல்ல ஒரு புனிதனால் உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தின் ஆணிவேர் எங்கு உள்ளது என்று யாருக்கும் தெரியாது.
எடப்பாடியே என்னிடம் கூறியுள்ளார்., ராஜன் செல்லப்பாவை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு பயன்படுத்திவிட்டு விரட்டிவிடுவேன் என எடப்பாடி ராஜன் செல்லப்பாவை பற்றி கூறியுள்ளார்.
தொடர்ந்து., செய்தியாளர்களை சந்தித்துபேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலக்கிருஷ்ணன் கூறுகையில், OPS அவர்களின் கட்டுப்பாட்டுக்கினங்க கழகத்தில் வளர்ச்சி குறித்தும்., தலைமை சொல்லும் நிகழ்வுகளை அனைத்தையும் மதுரையில் உள்ள 10 தொகுதியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தொகுதி வாரியாக பகிர்ந்து வருகிறோம். அதிமுகவின் உண்மைத்தொண்டர்கள் OPS பின்னால் தொண்டர் அணியாகவும், பணத்திற்கும் பதவிக்கும் இருக்கும் 2500 பேர் EPS பின்னால் டெண்டர் அணியாகவும் உள்ளது
ஒன்றரைகோடி தொண்டர்களும்., பொதுமக்களும் OPS இருக்கும் இடத்தை தேடி பின்னால் வருகிறார்கள்.






