தமிழகம்

இந்திரா காந்தி பிறந்த நாள் ராமநாதபுரம் காங் கொண்டாட்டம்

167views
முன்னாள் பாரத பிரதமர் இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 105 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மத்திய கொடி கம்பம் அருகே அவரது உருவப்படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காங்.கமிட்டி சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  பொதுமக்களுக்கு நெய் பொங்கல் வழங்கப்பட்டது.
மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜெ.ரமேஷ் பாபு தலைமை வகித்தார். நகர் தலைவர் டிஎம்எஸ் கோபி முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் எஸ்ஏஜி மணிகண்டன் (நகராட்சி கவுன்சிலர்), ராமநாதபுரம் வட்டார காங். தலைவர் டி.கார்குடி சேகர் திருப்புல்லாணி வட்டார தலைவர் சேது பாண்டியன், மாவட்ட இளைஞர் காங்.தலைவர் விக்னேஸ்வரன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காவனூர் கருப்பையா, காமராஜ், மேகநாதன், துரைப்பாண்டி, இலக்கிய பிரிவு முருகேசன், முன்னாள் ராணுவ பிரிவு நிர்வாகிகள் கோபால், ராமையா உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!