தமிழகம்

கெங்கவல்லியில் மது விற்ற 4பேர் கைது

660views
கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் அரசு மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவுக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கெங்கவல்லி எஸ்ஐ ‌ மணிமாறன் தலைமையில் கெங்கவல்லி போலீசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த முருகன் (52) சீனிவாசன் (51) கடம்பூர் பகுதியை சேர்ந்த ராணி(55) குமரேசன் (36) உள்ளிட்ட 4பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
‌ செய்தியாளர்: ரா.மணிகண்டன் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!