தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்  அரசு முதன்மை செயலர் ஆய்வு: அதிகாரிகளுக்கு உத்தரவு 

147views
ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு அரசு  நலத்திட்டங்கள்  முழுமையாக கிடைக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென  அரசு முதன்மை செயலர்  தர்மேந்திர பிரதாப் யாதவ்  உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட அளவில் மேற்கொண்டுள்ள  வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்  முன்னிலையில் அரசு முதன்மை செயலர்  தர்மேந்திர பிரதாப் யாதவ்  தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.  விவசாயப்பணிகள் துவங்கியதை யொட்டி விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளதை  அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.  விவசாயிகளுக்கு அந்தந்த ஆண்டிற்குரிய வேளாண் உபகரணங்களை மானியத்துடன் வழங்க வேண்டும். கலைஞரின் ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்ட செயல்பாடுகள்,  விவசாயிகளின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகள் மட்டுமின்றி தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப தரிசு நிலங்கள் மேம்பாடு,  பண்ணைக்குட்டை அமைத்தல் பணிகளை   முன்னுரிமை படி  இத்திட்டம் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தனிநபர் வீடு கட்டும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு மேம்படுத்துதல் உள்ளிட்ட  அனைத்து திட்டங்களை  உரிய காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும். கலைஞர் நகர்புற திட்டம், நமக்கு நாமே திட்டம், அமிர்த் சர்வோர் திட்டங்களை  பயனாளிகளுக்கு உரிய காலத்தில்  வழங்க வேண்டும்  என தெரிவித்தார்.

மழை காலத்தை கருத்தில் கொண்டு மீட்பு பணி  உபகரணங்களை தயாராக  வைத்துகொள்ள வேண்டும். ஏனாதி கோட்டை பகுதியில் வைகை  ஆற்றில் இருந்து பாசன கால்வாய்களுக்கு சீராக தண்ணீர் விநியோகம், நெல்மடூர் ஊராட்சி அங்கன்வாடி மையம்,  திம்மநாதபுரம் பகுதியில் வேளாண்  பணிகள்,  கடலாடியில் தோட்டக்கலை துறை பணிகளை  பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரிடர் கால மீட்பு  ஒத்திகையை பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா,  வேளாண் இணை இயக்குநர் கண்ணையா, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர், வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக்கூடம் செயலர் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) தனுஷ்கொடி, தோட்டக்கலை துணை இயக்குநர்  நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!