தமிழகம்

ராமநாதபுரத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு நகராட்சி தலைவர் மரியாதை

126views
ராமநாதபுரம், அக்.27- மருதுபாண்டியர் குருபூஜையை யொட்டி ராமநாதபுரத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு நகராட்சி தலைவர் கார்மேகம் மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் வண்டிகார தெரு அகமுடையார் இளைஞர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாமன்னர் மருதுபாண்டியர் உருவ படத்திற்கு நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நகர்மன்ற உறுப்பினர் காளிதாஸ்,
திமுக வார்டு செயலாளர்கள் வசந்தகுமார், இன்ஜினியர் மருதுபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!