தமிழகம்

லாரி மோதியதில் மின் கம்பம் சேதம் உரிய நேரத்தில் மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியர்களால் பெரும் அசம்பாவிதம் தவிர்த்து

99views
மதுரை பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் நுழைவாயில் மின்கம்பம் ஒன்று உள்ளது இந்த நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக லாரி ஒன்று அந்த மின் கம்பத்தில் பின்பகுதியில் மோதியது மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்து தொங்கியது.
உடனடியாக மதுரை அரசர் அடி உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.  விரைவாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் உடனடியாக வேறு மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் ஆனது தடைப்பட்டது மின்வாரியர்களின் துரித செயல்பாட்டால் மின் வயர்கள் அறுந்து கீழே விழுவதற்கு முன்னே மின் இணைப்பை உடனடியாக துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!