தமிழகம்

தேனியில் ஒன்றிய பாசிச பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக இளைஞர் மாணவர் போராட்டம்.

129views
இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் 27.10.2022 இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக தேனி பழைய பேருந்து நிலையம் நுழைவாயில் முன்பு மாலை 5.30 மணியளவில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் இரா.தமிழ் பெருமாள், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செ.ஆனந்த் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் AIYF மாவட்ட துணைச் செயலாளர் சு.சரவணபுதியவன், மாவட்ட துணைத் தலைவர் த.வீரையா, மாதர் சங்க மாவட்ட தலைவர் அழகேஸ்வரி, AISF மாவட்ட துணைச் செயலாளர் மூ.ஹரிஹரன், மாவட்ட துணைஞ தலைவர் கே.எம்பாலாஜி, சேதுபதி, க.ரமேஷ் சோ.மாரீஸ்வரன், ம.சுர்ஜித், சே.சந்துரு,ச.தாமஸ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!