தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக அமைப்பு தினம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது
100views
மாவட்டத்தலைவர் மகாலிங்கம் தலைமையேற்று கொடியேற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர் சென்னமராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் துணைத்தலைவர் அறிவழகன், செயலாளர் சரவணகுமார், பொருளாளர் கணேசன், அமைப்பு செயலாளர அப்புசாமி, இணைச்செயலாளர் பாலசந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
ஒன்றிய நிர்வாகிகள் முருகவேல், இலட்சுமிகாந்தன், முனியாண்டி, பாண்டிதீபா, இரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு களப்பிரச்சினைகளை எடுத்துரைத்தார்கள். உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்களை பிற மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே வெளி மாவட்டங்களில் இருந்து பணி மாறுதல் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்