243
மழை பொதுதான்.
அதன்
சுகமும் துயரும்
பொதுவல்ல!
நீங்கள்
உங்கள்
மழையில்
நனைவீர்கள் .
நான்
என் மழையில்
காய்வேன்.
அவ்வளவுதான்
சிட்டுக்குருவி
எழுந்து சென்ற கிளையில் வண்ணத்துப்பூச்சி வந்தமர்கிறது.
வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்திருந்த செடியில் சிட்டுக்குருவி சென்று
அமர்கிறது.
சிறகுகள்
வேறு வேறு.
கிளைகள் ஒன்றுதான்
வானம் வரைய
முயன்றேன்.
இயலவில்லை.
நிலம் வரைந்து
தோற்றேன்.
நீர்மையை வரைவது
கை கூடவே இல்லை.
தீயின் வண்ணம்
காற்றின் கோடுகள்
காகிதத்துக்குள்
நுழைய மறுத்தன.
கடைசியாக
ஒரு குழந்தையை வரைந்தேன்.
அலட்சியமாக
குழந்தை வரைந்தது
பஞ்ச பூத ஓவியம்.
ஒரு சிறிய
கோப
இடைவெளிக்குப்
பிறகு சிரிக்கிறாய்.
ஒரு சிறிய
சமாதான
இடைவெளிக்குப்
பின்
ரசிக்கிறேன்
இசையை மெளனமாகக் கேள்
என்கிறாய். மெளனத்தை இசையாகக்
கேள் என்கிறேன்
add a comment