விளையாட்டு

ஆஸி., அணியில் சிங்கப்பூர் வீரர் – இந்திய ‘டி-20’ தொடரில் வாய்ப்பு

101views
இந்தியாவுக்கு எதிரான ‘டி-20’ தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக். 16 முதல் நவ. 13 வரை நடக்கவுள்ளது.
இதற்கு தயாராகும் வகையில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி, செப். 20 முதல் 25 வரை என மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக பின்ச் தொடர்கிறார்.
டிம் வாய்ப்புசிங்கப்பூரை சேர்ந்த ‘மிடில் ஆர்டர்’ வீரர் டிம் டேவிட் 26, அணியில் சேர்க்கப்பட்டார். இவர், ஐ.பி.எல்., (இந்தியா, மும்பை), பிக்பாஷ் (ஆஸி.,-ஹோபர்ட்) தொடரில் பங்கேற்கும் இவர், ஆஸ்திரேலிய ஒப்பந்த விதிப்படி, தேசிய அணியில் இடம் பெற்றார். துவக்க வீரர் வார்னருக்கு ஓய்வு கொடுக்கும் வகையில், இந்திய தொடரில் சேர்க்கப்படவில்லை. இவருக்குப் பதில் காமிரான் கிரீன் சேர்க்கப்பட்டார்.
வேகப்பந்துவீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் இடம் பெற்றுள்ளனர். யாருக்கு இடம்தவிர, ‘டி-20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டது. இதில் காமிரான் கிரீன் நீக்கப்பட்டு, வார்னர் இடம் பெற்றார். உலக அணி விபரம்ஆரோன் பின்ச் (கேப்டன்), வார்னர், மிட்சல் மார்ஷ், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், மாத்யூ வேட், டிம் டேவிட், இங்லிஸ், ஆஷ்டன் ஏகார், ஸ்டார்க், கம்மின்ஸ், ஜாம்பா, ஹேசல்வுட், கேன் ரிச்சர்ட்சன்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!