இந்தியா

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு

86views
நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மஹாபஞ்சாயத் என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் அண்மையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவரது மகன் ஆசிஷ் மிஸ்ராவை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து சம்யுக்த் கிசான் மோர்சா சார்பில் மஹாபஞ்சாயத்து போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் குறிப்பாக மாநில எல்லைகளில் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
முன்னதாக விவசாயிகளின் தலைவர் ராகேஷ் டிகைத் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார். பின்னர் அவர் டெல்லிக்குள் நுழையமாட்டேன் என்று தெரிவித்ததை அடுத்து விடுவிக்கப்பட்டார்.
டெல்லி, ஹரியாணா இடையேயான சிங்கு எல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தடுப்புக்காவலில் எடுக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி ஹரியாணா, டெல்லி உத்தரப் பிரதேச மாநிலங்களை இணைக்கும் சாலைகளில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
* டெல்லியின் எல்லையோர மாவட்டங்களில் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
* பாதுகாப்பு காரணங்களுக்காக விரிவான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக டெல்லி ஜன்பத், கனோட் ப்ளேஸ், அசோகா சாலை, சன்சட் மார், டால்ஸ்டாய் மார்க் பகுதிகள் பாபா காரக் சிங் மார்க், பண்டிட் பன்ட் மார்க் ஆகிய பகுதிகளை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
* டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* இந்நிலையில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைத் கூறுகையில், காசியாபூர் எல்லையில் என்னை தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லச் செய்தனர் என்று ட்வீட் செய்துள்ளார். இதுபோன்ற தடுப்புக் காவல்களால் போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் பதிந்த மற்றொரு ட்வீட்டில், நாங்கள் எங்கள் இறுதி மூச்சுவரை போராடுவோம். ஒருபோதும் சோர்ந்துவிட மாட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!