விளையாட்டு

ஈட்டி எறிதல்: வெள்ளி வென்று வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா

119views

உல­கத் திடல்­தட சாம்­பி­யன்­‌ஷிப் போட்­டி­யில் ஈட்டி எறி­த­லில், இந்­தி­யா­வின் நீரஜ் சோப்ரா வெள்­ளிப் பதக்­கம் வென்­றுள்­ளார்.

அமெ­ரிக்­கா­வின் ஒரி­கன் மாநி­லம் யூஜின் நக­ரில் நடை­பெற்று வரும் இப்­போட்­டி­யின் இறு­திச் சுற்­றில், அவர் 88.13 மீட்­டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்­டா­வது இடத்­தைப் பிடித்­தார்.

இதன்­மூ­லம் 2003ஆம் ஆண்டுக்­குப் பிறகு உல­கத் திடல்­த­டப் போட்டி­யில் இந்­தி­யா­வுக்­குப் பதக்­கம் கிடைத்­துள்­ளது.

2003ல் மக­ளி­ருக்­கான நீளம் தாண்­டு­தல் பிரி­வில் இந்­திய வீராங்­கனை அஞ்சு ஜார்ஜ் வெண்­க­லம் வென்­றார்.

அத்­து­டன் இது, உல­கத் திடல்­தடப் போட்டி வர­லாற்­றில் இந்­தியா­வுக்­குக் கிடைத்­துள்ள இரண்­டா­வது பதக்­க­மா­கும்.

கிரெ­ன­டா­வைச் சேர்ந்த நடப்பு வெற்றியாளர் ஆண்­டர்­சன் பீட்­டர்ஸ் 90.54 மீட்­டர் தூரம் ஈட்டி எறிந்து, தங்­கம் வென்­றார்.

செக் குடி­ய­ர­சின் ஜாக்­கூப் வாட்­லெஜ் 88.09 மீட்­டர் தூரம் எறிந்து வெண்­க­லம் வென்­றார்.

இறு­திச்­சுற்­றில் இடம்­பெற்ற மற்­றொரு இந்­திய வீர­ரான ரோகித் யாதவ் பத்தாவது (78.72 மீட்டர்) இடத்தைப் பிடித்­தார்.

பதக்­கம் வென்று நாட்­டிற்குப் பெருமை சேர்த்­துள்ள நீரஜ் சோப்ரா­வுக்கு வாழ்த்­துக்­கள் குவிந்­த­வண்ணம்
உள்­ளன.

நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “மீண்டும் ஒரு முறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா,” என்றார். கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!