உலகம்உலகம்

உக்ரேன் மீது ரஷ்யா பொழியும் ஏவுகணை மழை

203views

ரஷ்­யப் படை­கள் தென் உக்­ரே­னின் மிக்­கோ­லிவ் பகு­தியை நேற்று தாக்­கி­ய­து­டன் நாடு முழு­வ­தும் நடத்தி வரும் அதன் தாக்­கு­தல்­க­ளை முடுக்கிவிட்டன.

நேற்று நடந்த தாக்­கு­த­லில் மொத்­தம் எட்டு ஏவு­க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­டன. இத­னால் நான்கு மாடிக் குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்­றில் குறைந்­தது மூவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக மிக்­கோ­லிவ் நக­ரின் தலை­வர் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், வட்­டா­ரத்­தில் உள்ள வெளி­நாட்­டுக் கூலிப்­ப­டை­யி­ன­ருக்­கான பயிற்­சித் தளத்­தைத்­தான் தன் படை­கள் குறி­வைத்த­ தாக ரஷ்யா குறிப்­பிட்­டுள்­ளது.

எங்கும் போர்க்களம்

லிஸி­சன்ஸ்க் நக­ரைச் சுற்­றி­வ­ளைக்க ரஷ்­யப் படை­கள் முயன்று வரும் நிலை­யில் அப்­ப­கு­தியை ‘எங்­கும் போர்க்­க­ளம்’ என்று கூறி வர்­ணித்­தார் லுஹன்ஸ்க் மாகா­ணத்­தின் ஆளு­நர். கடந்த சில நாள்­க­ளாக மத்­திய உக்­ரே­னி­லும் ரஷ்­யா­வின் ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­கள் அதி­க­ரித்­துள்­ள­தாக க்ரிவி ரியின் ஆளு­நர் குறிப்­பிட்­டார்.

“பூமி­யில் இருந்­த­தற்­கான அடை­யா­ளமே இல்­லா­த­படி பல கிரா­மங்­கள் அழிக்­கப்­பட்­டு­விட்­டன,” என்று அந்­தத் தாக்­கு­தல்­களைச் சாடி­னார் க்ரிவி ரியின் ஆளு­நர் ஒலெக்­சாண்­டர் வில்­குல்.

ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் தலை­மை­யில் படை­கள் தொடர்ந்து ஐந்­தா­வது மாத­மா­கத் தங்­கள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

வேண்டுமென்றே வைத்த குறி

திங்­கட்­கி­ழ­மை­யன்று மத்­திய உக்­ரே­னில் அமைந்­துள்ள கடைத்­தொ­குதி ஒன்­றில் நடத்­தப்­பட்ட ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் குறைந்­தது 18 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். சுமார் 36 பேரை இன்னும் காண­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

தன் மக்­க­ளைக் கொல்ல வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் ரஷ்யா வேண்­டு­மென்றே அந்­தக் கடைத்­தொ­கு­தி­யைத் தாக்­கி­ய­தாக உக்­ரேன் கூறி­யது. தாக்­கு­தல் நடத்­தி­ய­போது கடைத்­தொ­கு­தி­யில் யாரும் இல்லை என்­றும் அதன் அரு­கி­லுள்ள ஆயு­தக் கிடங்­கைத் தான் குறி­வைத்­தது என்­றும் ரஷ்யா கூறிற்று.

“இந்­தப் பகு­தியை ரஷ்ய ஏவு­கணை மிகத் துல்­லி­ய­மா­கக் குறி­பார்த்­துத் தாக்­கி­யுள்­ளது. வேண்­டு­மென்றே நடத்­தப்­பட்ட தாக்­கு­தல் இது,” என்று காணொளி வழி உரை நிகழ்த்­திய உக்­ரேன் அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலென்ஸ்கி கூறி­னார். ரஷ்­யப் படை­கள் தங்­க­ளால் முடிந்த அள­வுக்கு உக்­ரேன் மக்­க­ளின் உயி­ரைக் குடிக்­கப் பார்ப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

இருப்­பி­னும் ரஷ்­யா­வின் பக்­க­மும் பல உயி­ரி­ழப்­பு­கள் இருப்­ப­தா­க­வும் வளங்­கள் குறைந்து வரு­வ­தா­க­வும் ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். மேலை நாடு­க­ளின் நெடுந்­தொ­லைவு ஏவு­க­ணை­கள் போன்ற ஆயு­தங்­கள் உக்­ரே­னைச் சென்று அடை­வ­தற்­குள் ரஷ்யா அதன் தாக்­கு­தல்­களை துரி­த­மா­க­வும் அவ­சர அவ­ச­ர­மா­க­வும் செய்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

“ரஷ்­யர்­கள் தங்­கள் கையில் கிடைப்பதைக் கொண்டு தாக்­கு­தல் நடத்­து­கின்­ற­னர். பள்­ளி­கள், பாலர் பள்­ளி­கள், கலா­சார மன்­றங்­கள் என ராணு­வத் தொடர்பு இல்­லாத இடங்­க­ளை­யும் வேறு­ப­டுத்­திப் பார்க்­க­வில்லை,” என்­றார் லுஹான்ஸ்க் ஆளு­நர் செர்­ஹிய் ஹைடாய் கூறி­னார்.

நேட்டோவின் பதிலடித் திட்டம்

இதற்­கி­டையே, ஸ்பெ­யின் தலை­ந­க­ரான மட்­ரிட்­டில் நேட்டோ நாடு­க­ளின் தலை­வர்­கள் சந்­தித்­த­னர். ரஷ்­யா­வின் செயல்­க­ளுக்­குப் பதி­லடி தரு­வ­து தொடர்­பான கொள்­கை­யைப் பற்றி பேசு­வ­தும் அவர்­களின் சந்­திப்­பில் ஓர் அங்­க­மாக இடம்­பெற்­றது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!