190
அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு மூன்றாவது முறையாக மற்றும் இந்த வருடத்திற்கான புதிய கார்டு புதுப்பித்தல் முறையில் சுமார் 700 குடும்பங்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி:-
அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் Privilege Fast Service card மூன்றாம் கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு இன்று வழங்கப்பட்டது
இறைவனின் நாட்டப்படி மூன்றாம் கட்டமான விழா நிகழ்வு நாள் 06/03/2022 ஞாயிற்றுக்கிழமை கார்டு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் காலை 9 முதல் மாலை 5 வரை எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள LLH மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள மூன்றாவது கீழ்தளத்தில் மிக சிறப்பானமுறையில் நடைபெற்றது