சிவகுமாரின் சபதம் படத்திற்கு பிறகு ஹிப் ஆப் தமிழா ஆதி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் அன்பறிவு.
இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன் ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார் வருகிற 7ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படத்தில் நடித்திருப்பது பற்றி ஹிப் ஹாப் ஆதி கூறியதாவது: இந்தப்படத்தில் காமெடியை தாண்டி பொழுதுபோக்கு அம்சங்கள் குடும்ப பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு இப்படம் இருக்கும். முதன் முறையாக இது எனக்கு பெரிய பட்ஜெட் படம். நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். நெப்போலியன் சார், விதார்த் சார் முக்கிய பாத்திரங்கள் செய்துள்ளார்கள். ஒரு கிளாசிக் கதை அதை மீண்டும் குடும்பங்களோடு கொண்டாடும் படமாக உருவாக்கியுள்ளோம். ஒரு குடும்ப படத்தை மியூசிக்கலாக உருவாக்க நினைத்து தான் இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் மியூசிக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எம்ஜிஆர் படங்கள் முதல் ஏகப்பட்ட க்ளாசிக் படங்கள் இந்த கதையில் வந்திருக்கிறது. அதையே தான் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சித்திருக்கிறோம். கமர்ஷியலை தாண்டி கிளாசிக்கான படைப்பாக இப்படம் இருக்கும். வேகமாக ஓடிட்டு இருக்கிற உலகத்துல, அறிவோட இருக்குறதுனா அன்போட இருக்கிறது தான் என்பதை தான் இப்படம் சொல்கிறது. வழக்கமான காட்சிகள் ஒவ்வொன்றையும் வித்தியாசமாக செய்திருக்கிறோம். இரட்டை வேடம் செய்தது சவாலாக இருந்தது. என்றார்.