சினிமா

ரத்தம் தெறிக்கும் தலைப்புடன் களமிறங்கும் கந்தசாமி டைரக்டர்

172views

5 ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப்பயலே,கந்தசாமி ஆகிய படங்களை இயக்கியவர் சுசி கணேசன்.

நீண்ட நாட்களாக படங்களை இயக்காமல் இருந்த இவர் தற்போது புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்தப் படத்திற்கு ரத்தம் தெறிக்கும் வகையில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

5 ஸ்டார், விரும்புகிறேன், திருட்டு பயலே, திருட்டுப் பயலே 2, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவரது திருட்டுப் பயலே, திருட்டுப் பயலே 2 மற்றும் கந்தசாமி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றவை.

குறிப்பாக திருட்டுப் பயலே படம் மிகவும் சிறப்பான பெயரை இவருக்கு பெற்றுத் தந்தது. பெண்களை திருமணம் செய்வதாய் ஆசைக்காட்டி, அவர்களை ஏமாற்றும் கேரக்டரை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. நெகட்டிவ் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டாலும் சிறப்பான வரவேற்பை பெற்றது இந்தப்படம்.

தமிழில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன், பர்ஸ்ட் லுக் வெளியீடு! தமிழில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன், பர்ஸ்ட் லுக் வெளியீடு!

இதேபோல விக்ரம் நடிப்பில் வெளியான கந்தசாமி படம் அவருக்கு சிறப்பான ஏற்றத்தை தந்தது. அவரது கேரியரில் சிறப்பான படமாகவும் அமைந்தது. படத்தில் விக்ரம் தனது கேரக்டரில் பின்னி பெடலெடுத்திருப்பார். இந்தப் படமும் சுசி கணேசனுக்கு சிறப்பாக அமைந்தது.

இந்நிலையில் படங்கள் இயக்குவதில் கேப் விட்டிருந்த சுசி கணேசன் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். இந்த முறை அவர் ரத்தம் தெறிக்கும் படத்துடன் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். வஞ்சம் தீர்த்தாயடா என்ற படத்தை அவர் இயக்கவுள்ளார்.

படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். படத்தை 4 வி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பை வரும் பொங்கலன்று அறிவிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!