தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் காலிறுதியில் விளையாட தமிழக அணி தகுதி பெற்றது. எப் பிரிவில் தமிழ்நாடு – இமாச்சலப்பிரதேசம் நேற்று மோதின. இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தமிழகம் 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. தமிழகம் சார்பில் சதீஷ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த… அரவிந்த், மனோஜ்குமார், முத்துக்குமார் தலா ஒரு கோல் போட்டனர். ஆட்ட நாயகனாக தேர்வான தமிழக வீரர் அரவிந்துக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ் விருது வழங்கி கவுரவித்தார். மேற்கு ஒன்றிய செயலர் முருகேசன், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் மற்றும் ஹாக்கி யூனிட் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
160views
You Might Also Like
டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதுகுளத்தூர் மாணவர்
சென்னை : சென்னை மாவட்ட அளவில் நடந்த டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் முதுகுளத்தூர் ஹெச். ஹஸன் அஹமது அவர்களின் பேரன் ஏ. அப்துல்லா அவூஃப் சப் ஜூனியர்...
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “Chennai District Masters Athletic Championship 2025” தடகள போட்டி
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athletic Championship 2025" தடகள போட்டி...
மாநில அளவிலான கைப்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி 27.01.25 மற்றும் 28.01.25 ஆகிய இரு தினங்கள்...
காட்பாடியில் 50 -வது ஜூனியர் கபடி போட்டிகள்
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அரசு உள்விளையாட்டு மைதானத்தில் 50 -வது ஜூனியர் கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார். அருகில்...
காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் வேலூர் குடியாத்தம் வீரருக்கு 4 தங்கப் பதக்கம் !!
தென்னாப்ரிக்கா சன்சிட்டி நகரில் நடந்த காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் ஜெயமாருதி...




