வணிகம்

தடுமாறி வரும் கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின் மட்டும் சற்றே ஏற்றம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்

606views

கடந்த சில அமர்வுகளாக கடும் சரிவினைக் கண்டு வரும் பிட்காயின் மதிப்பானது, சற்றே ஆறுதல் தரும் விதமாக அதிகரித்து காணப்படுகின்றது.

தொடர்ச்சியாக பலமான ஏற்றம், பலமான வீழ்ச்சி என கண்கட்டி வித்தை காட்டி வரும் பிட்காயினில் முதலீடு செய்வோமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தவர்கள் கூட தெளிந்திருக்கலாம். அந்தளவுக்கு கடந்த இரு தினங்களில் பலத்த வீழ்ச்சியினை கண்டுள்ளது.

தற்போது கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் ஓமிக்ரான் அச்சத்தின் மத்தியில், அடுத்து பங்கு சந்தைகள் என்னவாகுமோ? என்ற அச்சம் இருந்து வருகின்றது.

இதற்கிடையில் இந்த பங்கு சந்தைகள், தங்கத்திற்கு மாற்றாக கிரிப்டோகரன்சிகள் இருக்குமா? என்ற கேள்வி சர்வதேச அளவில் இருந்து வருகின்றது.

டிஜிட்டல் கரன்சி – பிட்காயின்: இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..?! தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்..!

பெரும் வீழ்ச்சி

இதற்கிடையில் முதலீட்டாளர்கள் இடையே பெரும் சலசலப்பினை ஏற்படுத்தி வருகின்றது பிட்காயின் வர்த்தகம். ஏனெனில் இன்று கிரிப்டோகரன்சிகளில் முதன்மை கரன்சியாக இருந்து வரும் பிட்காயின் மதிப்பானது ஒரு நாளில், ஒரு மணி நேரத்தில் 10,000 டாலர் சரிவில் காணப்பட்டது. இது அமெரிக்க மத்திய வங்கியானது வட்டியை அதிகரிக்கலாம் என்பதாலும், மறுபுறம் ஓமிக்ரான் அச்சமும் சந்தையில் இருந்து வருகின்றது. இதுவும் காரணமாக இருக்கலாம் என்ற யூகம் இருந்து வருகின்றது.

பெருகி வரும் ஆதரவு

சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆதரவுகள் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் கிரிப்டோவுக்கு எதிரான எச்சரிக்கைகளும் வந்து கொண்டு தான் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்தான ஒழுங்குமுறை மசோதா தாக்கம் செய்யடவுள்ளது. இதன் மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகம், இந்தியாவில் ஓழுங்கு படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்னும் கிரிப்டோக்களின் விலை நிலவரம் என்னவாகுமோ என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஏனெனில் இந்தியா போல ஒவ்வொரு நாடும் ஒழுங்குபடுத்தினால் நிச்சயம் ஒரு பெரும் மாற்றம் இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்துகளை கூறுகின்றனர்.

பிட்காயின் நிலவரம்

பிட்காயின் மதிப்பானது சற்று அதிகரித்து, 48,720.57 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 49,759.58 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 47,859.51 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 70.84% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

எத்திரியம் மதிப்பு

இதே எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 1.28% அதிகரித்து, 4,112.64 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 4,254.51 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,985.81 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 463.44% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

கார்டானோ நிலவரம்

கார்டானோ மதிப்பானது 5.43% குறைந்து, 1.32 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.45 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.32 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 632.13% ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 6.07% குறைந்து, 0.837263 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.90 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.61 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 277.78% ஏற்றம் கண்டுள்ளது.

ஸ்டெல்லர் மதிப்பு

ஸ்டெல்லர் மதிப்பானது 7.36% குறைந்து, 0.270999 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.30 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.27 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 0.797482 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 115.31% ஏற்றம் கண்டுள்ளது.

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் மதிப்பானது 6.10% குறைந்து, 0.179033 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.19 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.13 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3,676.35% ஏற்றத்தினை கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 0.740796 டாலராகும்.

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பானது 9.81% குறைந்து, 17.09 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 19.31 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 13.35 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 311.94% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 45.01 டாலராகும்.

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் மதிப்பானது தற்போது 7.95% குறைந்து, 29.13 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 32.38 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 24.84 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 300.19% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 55.11 டாலராகும்.

லைட்காயின் நிலவரம்

லைட்காயின் மதிப்பானது தற்போது 4.63% குறைந்து, 151.99 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 166.60 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 151.23 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 23.52% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 413.47 டாலராகும்.

ஷிபா இனு நிலவரம்

ஷிபா இனு மதிப்பானது தற்போது 4.55% சரிந்து, 0.000037 டாலராக காணப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 47.54M% சரிவில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 0.000089 டாலராகும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!