சினிமா

விக்ரமுடன் கூட்டணி சேர்ந்த இயக்குனர் ரஞ்சித்! அரசியல் படமா?

61views

மக்களால் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம். இவரின் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது இயக்குனர் ரஞ்சித் உடன் ஒரு படத்தில் கைகோர்த்துள்ளார்.

வித்தியாசமான கதை கருவை கொண்டு படம் எடுப்பதில் இயக்குனர் ரஞ்சித் வல்லவர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படம் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரசிகர்களிடையே அதிகப்படியான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கப்போவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது விக்ரம்-ரஞ்சித் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் “விக்ரமுடன் கூட்டணி அமைத்தது மகிழ்ச்சி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த புதிய படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘சார்பட்டா பரம்பரை’ வெற்றியினை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் விக்ரம் நடிப்பில் அடுத்த ஆண்டு மகான், பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், கோப்ரா போன்ற படங்கள் ரிலீசாக உள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!