132
என்னிடம் கேட்பாயா நீ
- மனதின் ….
சலனங்கள்
கேள்விகள்
விசாரணைகள்
கூச்சல்கள்
எண்ணத்தின் பரிபாஷைகள்
விஷமத்தின் பகடிகள்
தங்கு தடையற்ற கற்பனைகள்
நீயாக நான் வியாபிக்கும் தருணங்கள்
வெண்பஞ்சு மேகங்களை அழைத்து செல்லும் வானம் போல
அனைத்துக்கும் செவி சாய்க்கும் புத்தியின் கொண்டாட்டங்களை
மழையின் ஈரத்தை உள் வாங்கும் பெண்ணாக ………
என்னிடம் கேட்பாயா நீ
சாதிகளற்ற சமுதாயத்தில்
- சாதிகளற்ற சமுதாயத்தில்
குழந்தைகள் பயமின்றி தெருக்களில்
விளையாடும் விளையாட்டு
முற்றத்தில் அமர்ந்த
கள்ளம் கபடமற்ற பேச்சுக்கள்
பெரியவர்கள் என்றால்
ஒரு பயபக்தியுடன் நடக்கும் தன்மை
உறவுகளின் நேசங்கள்
அண்டை வீட்டுடன் எந்த விதர்ப்பமின்றி
பழகும் தன்மை
ஞாயிறுகளில் உறவினர்களுடன்
குழந்தைகள் சூழ சாப்பிட்டு
உறவாடும் பொழுதுகளும்
நமக்கான விவசாயத்தில் உள்ளாடும்
உழவின் உழைப்பான மேன்மையும்
நம் வாழ்வினை பூர்ணமாக்க
இதைதவிரஏதுமில்லை
உன்னிடம் கேட்பதற்கு இறைவா -
பிரபா முருகேஷ்
add a comment