நட்பு கால்பந்து போட்டியில் மும்பை அணி 2-1 என, ஐதராபாத் அணியை வீழ்த்தியது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 8வது சீசன் வரும் நவ. 19 முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக ‘நடப்பு சாம்பியன்’ மும்பை சிட்டி அணி, நட்பு ரீதியிலான போட்டிகளில் பங்கேற்கிறது. கோவாவில் நடந்த முதல் போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு இகோர் அங்குலோ, குர்கீரத் சிங் தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர். ஐதராபாத் அணிக்கு பர்த் ஆக்பெச்சே ஒரு கோலடித்து ஆறுதல் தந்தார்.மும்பை அணி, தனது 2வது நட்பு போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை வரும் நவ. 4ல் எதிர்கொள்கிறது.
142views
You Might Also Like
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “Chennai District Masters Athletic Championship 2025” தடகள போட்டி
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athletic Championship 2025" தடகள போட்டி...
மாநில அளவிலான கைப்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி 27.01.25 மற்றும் 28.01.25 ஆகிய இரு தினங்கள்...
காட்பாடியில் 50 -வது ஜூனியர் கபடி போட்டிகள்
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அரசு உள்விளையாட்டு மைதானத்தில் 50 -வது ஜூனியர் கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார். அருகில்...
காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் வேலூர் குடியாத்தம் வீரருக்கு 4 தங்கப் பதக்கம் !!
தென்னாப்ரிக்கா சன்சிட்டி நகரில் நடந்த காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் ஜெயமாருதி...
விளையாட்டு போட்டிகளில் வெற்றி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் 13.09.2024 அன்று இராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கிராஸ் கன்ட்ரி ரேஸ் (Cross...




