பிரான்சில் வசிக்கும் மக்களுக்கு இந்த வாரத்தின் கடைசியில் பயணம் மேற்கொள்வது தொடர்பில், ஏமாற்றமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில், SNCF என்ற ரயில் சேவை நிறுவனத்தின், அதிவேக ரயில்கள் பல இந்த வாரத்தின் கடைசியில் ரத்து செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ரயில்வே பணியாளர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், Occitanie, Pays de la Loire, Centre Val de Loire மற்றும் Nouvelle Aquitaine, போன்ற இடங்களிலிருந்து செல்லக்கூடிய மற்றும் அந்த இடங்களுக்குச் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இன்று முதல் நாட்டில் Toussaint விடுமுறைகள் தொடங்கவிருக்கிறது. பள்ளிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதனால், மக்கள் பலரும் பயணம் செல்ல தீர்மானித்திருப்பார்கள். இந்நிலையில், இவ்வாறு ரயில்வே பணி நிறுத்தம் அறிவிக்கப்பட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.