166
தேவி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க……..
மௌனமாய் இருந்த கார்குழலி சிறிது நேரத்தில் பேச ஆரம்பிக்கிறாள்.
“என்னை மன்னித்துவிடு”
“நான் என்ன கேட்கிறேன் நீ என்ன பதில் சொல்கிறாய்???”
“நீ கேட்பதற்கு தான் நான் பதில் சொல்கிறேன். “என்னை மன்னித்துவிடு”
“என்ன சொல்கிறாய்???”
“ஆமாம்! நான் செய்த தவறுக்கு தான் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கும், செழியனுக்கு ம் திருமணம் நடந்துவிட்டது. நான் ஆரம்பத்திலேயே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவரிடம் இந்த விஷயத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும் செழியனின் வற்புறுத்தலில் தான் எங்களுடைய திருமணம் நடைபெற்றது.”
இதைக்கேட்டதும் அதிர்ச்சியில் தேவியின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது……..
கோபத்தில் கார்குழலியிடம் சண்டை இடுகிறாள்.
இருப்பினும் இவளிடம் பேசுவது வீண் இதற்குரிய தன் கணவனிடம் மட்டுமே பேசவேண்டும் என்று தன் கணவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை அறைக்கு செல்கிறாள்.
அங்கு கால் முறிப் பட்ட நிலையில் சுயநினைவின்றி கிடந்தான் செழியன்.
அதைப் பார்த்ததும் ஒன்றும் பேசாமல் அப்படியே வெளியே வந்து கதறிக்கொண்டே இருந்தாள்.
லக்ஷ்மியும் தன் மகன் வாழ்க்கையை இப்படி நாசம் செய்து விட்டாள் என்று கோபத்தில் கார்குழலியிடம் சண்டையிடுகிறார்.
அவள் அங்கிருந்து வெளியே சென்றதும், லக்ஷ்மி தேவியை வந்து சமாதானம் செய்ய முயற்சிக்கிறாள்.
“தேவி எதற்கும் கவலைப்படாதே பார்க்கலாம்…..செழியன் எழுந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.
பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று”
எதற்கும் பதில் பேசாமல் எதற்காக தான் கவலைப்படுவது என்று தெரியாமல் அழுதுகொண்டே இருந்தாள்.
செழியன் விபத்துக்குள்ளான விஷயத்தை யாரோ ஒருவர் சரவணனிடம் சொல்ல அவரும் ,கவிதாவும் கடையை மூடிவிட்டு பதறியடித்துக் கொண்டு வருகிறார்கள்.
மருத்துவமனைக்கு வந்ததும் லக்ஷ்மியும், தேவியையும் பார்த்து என்னிடம் ஏன் எதுவும் சொல்லாமல் வந்து விட்டீர்கள். யாரோ ஒருவர் எனக்கு சொல்லி நான் இங்கு வருகிறேன். என்ன ஆச்சு???” என் மகனுக்கு என்று கேட்க…….
உடனே தேவி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு தன் மாமனாரிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல் “இல்லை மாமா அவருக்கு சிறியதாக மட்டுமே அடிபட்டுள்ளது. பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை நீங்கள் சற்று பதறாமல் உட்காருங்கள்.”
அவரை சமாதானப்படுத்தி உட்கார வைக்கிறாள்.
கவிதா உடனே ஓடி வந்து தன் தாயிடம் சென்று கேட்க…அவள் தன் மகளை தனியாக அழைத்து சென்று மருத்துவமனையில் நடந்த அனைத்து விஷயத்தையும் அவளிடம் சொல்ல அவள் அப்படியே அதிர்ச்சியில் நிற்கிறாள்.
“அம்மா என்ன சொல்ற….இதெல்லாம் நிஜமாவே உண்மையா..என்னால் நம்ப முடியவில்லை? நம் செழியனா இப்படி….”
எதுவாக இருந்தாலும் செழியன் கண்விழித்த பின்னேதான் நமக்குத் தெளிவாகும்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
Nice