சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி – 28

86views
அடுத்த நாள் காலை நேரமாக எழுந்து செழியன் நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்க தேவியும் அதிகாலையிலேயே எழுந்து டீ போட்டுக் கொடுக்கிறாள்.
சிறிது நேரத்திலேயே கிளம்பி விடுகிறான்.
காலையிலேயே அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்து வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்லி உறங்கச் செல்கிறாள்.
காலையில் எழுந்ததும் லக்ஷ்மியும், கவிதாவும், தேவி அதிகாலையில் எழுந்துகொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து கொண்டு அவர்கள் இருவரும் தேவியை திட்டுகின்றனர்.
சரவணன் கடைக்கு கிளம்பி வெளியே வந்ததும் இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு “அப்பா காபி எடுத்துட்டு வரட்டுமா” என்று கேட்க நேரமாகிறது.
எல்லாம் கடையில் போய் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
சிறிது நேரம் கழித்து சமையல் அறை சென்று பார்த்த பின்புதான் அனைத்து வேலைகளும் முடித்து வைத்திருந்ததை பார்த்தனர்.
அம்மா என்ன ஆச்சு ? உன் மருமகளுக்கு காலையிலேயே எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து வைத்திருக்கிறாள் . செழியனும் இன்னும் தூங்கி எழுந்து வெளியே வரவில்லை???
சிறிது நேரத்தில் தேவி எழுந்து குழந்தையுடன் வெளியே வந்து லட்சுமியிடம் குழந்தையைக் கொடுத்து “அத்தை என்னன்னே தெரியல?? இரவு முழுவதும் குழந்தை உறங்காமல் அழுதுகொண்டே இருந்தாள்.
கொஞ்சம் என்னவென்று பாருங்கள்.”
“குழந்தைக்கு உடல் வலியாக கூட இருக்கலாம். அதனால் போய் வெண்ணீர் வைத்துவிட்டு குழந்தைக்கு
நல்லெண்ணெய் சூடுபடுத்தி எடுத்து வா …உடல் முழுவதும் தேய்த்து குளிப்பாட்டினாள் குழந்தை உடல்வலி இன்றி நன்றாக தூங்குவாள்.”
குழந்தைக்கு என்னையை தேய்த்துக் கொண்டிருக்கும் லக்ஷ்மி.
“என்ன குழந்தை கால் ஒரு பக்கம் வளைந்தது போல் இருக்கிறது.”
உடனே தேவியோ கோபத்துடன் “அது எப்படி அத்தை குழந்தையின் கால் நன்றாக இருக்கிறது எப்படி வளைந்து இருக்கிறது என்று சொல்லுவீர்கள்.”
தேவி கோபத்துடன் பேச, “கால் அப்படித்தான் இருக்கிறது அதனால் தான் சொன்னேன்” என்று பேச்சை நிறுத்துகிறாள்.
உடனே கவிதா செழியனின் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று கேட்க இல்ல “சித்தி அவர் காலையிலேயே ஏதோ தேர்வு இருக்கிறது என்று வெளியே சென்றுவிட்டார்.”
“அம்மா பார்த்தீர்களா செழியன் அவனது மனைவி வந்ததும் எப்படி மாறிவிட்டான் என்று எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்பவன். இன்று நம்மிடத்தில் சொல்லாமல் சென்றிருக்கிறான்.
அப்படி என்றால் தேவி தான் சொல்லியிருப்பாள் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் என்னிடம் மட்டும் சொன்னால் போதும். என்று “
இந்த வார்த்தை தேவிக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது.
சித்தி “நானே நேற்று தான் வந்தேன்” அதற்குள் ஏன் இவ்வளவு பேச்சு?”
” நான் ஒன்றும் இல்லாததை சொல்லிவிடவில்லை.”
” வந்து ஒருநாள் கூட ஆகவில்லை அதற்குள் அவன் இப்படி தலை கீழாக மாறி விட்டான். அதை தான் சொன்னேன்.”
உடனே கோபத்தில் குழந்தையை வாங்கிக் கொண்டாள் தேவி.
அவளே குளிக்க வைத்துவிட்டு குழந்தையுடன் உறங்க செல்கிறாள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
  • ஷண்முக பூரண்யா. அ

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!