பிரிட்டனில் 50 வயதுக்கும் மேலானவா்களுக்கு அடுத்த வாரம் முதல் 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக நிபுணா் குழு அளித்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவித் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக, 12 முதல் 15 வயது வரை கொண்ட மாணவா்களுக்கு ஃபைஸா்/பயோஎன்டெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவிருப்பதாக சுகாதார மற்றும் சமூக நலத் துறை (டிஹெச்எஸ்சி) அறிவித்தது.
நாட்டின் தலைமை மருத்துவா் இதற்கான அனுமதியை அளித்துள்ளதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று டிஹெச்எஸ்சி தெரிவித்துள்ளது.