ஃபிடே ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை, இந்தியா 3 வெற்றிகளை பதிவு செய்து “பி’ குரூப்பில் முதலிடத்துக்கு வந்துள்ளது.
முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான இந்திய அணி, ஷென்ùஸன் சீனாவை 5-1 என்ற கணக்கிலும், அஜர்பைஜானை 4-2 என்ற கணக்கிலும், பெலாரûஸ 3.5-2.5 என்ற கணக்கிலும் தோற்கடித்தது.
இதையடுத்து இந்தியா 6 சுற்றுகளின் முடிவில் 11 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, ஹங்கேரி மற்றும் பிரான்ஸ் முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளன.
இந்திய அணியில் விஸ்வநாதன் ஆனந்த், விதித் சந்தோஷ் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, நிஹல் சரின், ஆர்.பிரக்னானந்தா, கோனெரு ஹம்பி, டி.ஹரிகா, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி, ஆர்.வைஷாலி, பி.சவிதா ஸ்ரீ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.