சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி- 15

128views
கவிதாவின் மூத்த மகள் பனிரெண்டாம் படிக்கும் நிலையில், அவளது இளைய மகள் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.
மூன்றாவது மகனோ ஆறாவது படித்த நிலையில் இளைய மகளுக்கும், மகனுக்கும் படிப்பில் அந்தளவு நாட்டம் இல்லை.
மூத்த மகளை பனிரெண்டாம் வகுப்புவரை படிக்க வைத்துவிட்டு திருமணம் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாள்.
அப்போது இந்த பூச்சூட்டு விழாவிற்கு வந்த உறவினர் ஒருவர் லட்சுமியிடம் தன் மகனுக்காக கவிதாவின் மகளை பெண்பார்க்க கேட்கிறார்கள்.
அதற்கு பதில் கூறிய லட்சுமி நான் என் மகளிடம் கேட்டு சொல்கின்றேன்.
சரி இரண்டு நாட்களுக்குள் சொல்லிவிடுங்கள் என்று சொல்லி உறவினர் கிளம்புகிறார்.
வேலை முடித்து வீட்டுக்கு வந்த கவிதாவிடம் லட்சுமி ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்ன என்று கேட்க, நேற்று நடந்த விழாவில் நமது உறவினர் ஒருவர் உனது மூத்த மகளை பார்த்திருக்கிறார்.
அவர்களது மகனுக்கு அவளை திருமணம் செய்ய வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர்.
“உனக்கு சரி என்றால் அவர்களை பெண் பார்க்க வர சொல்லலாம். சரி அம்மா பெண் பார்க்க வர சொல் பெண்பார்த்து சென்றதும் பையனை பற்றி விசாரித்துக் கொள்ளலாம்.
நீயே ஒரு நல்ல நாள் பார்த்து அவர்களிடம் வரச்சொல். அன்று நானும் வேலைக்கு விடுப்பு சொல்லிவிட்டு வீட்டில் இருக்கிறேன்” என்று சொல்கிறாள் கவிதா.
சரி நான் அதற்கான வேலையை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்புகிறாள் லட்சுமி.
ஒரு வாரம் அப்படியே சென்றது.
செழியனும் தன் அக்கா குடும்பத்திற்காக சேர்த்து உழைக்க ஆரம்பித்தான்.
தன் அக்கா வீட்டிற்கு தினமும் வருவதும் அவளுடைய குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கித் தருவதும் என அவன் நாட்கள் கழிகிறது.
இதற்கிடையில் மனைவியை வெளியே அழைத்து செல்லும் நேரம் குறைவாகி விட்டது.
இதனால் செழியனுக்கும், தேவிக்கும் இடையில் இடைவெளி அதிகமாக இருந்தது.
இதை வெளியில் காட்டிக் கொள்ளாத தேவி இருப்பினும் செழியனை அன்பாகவே பார்த்துக்கொண்டாள்.
இன்று பெண் பார்க்க வருகிறார்கள் அதனால் வேலைக்கு விடுப்பு சொல்லிவிட்டு வீட்டில் இரு என்று லக்ஷ்மி சொல்கிறாள்.
“சரி மா இந்த விஷயத்தை நான் தம்பியிடம் வந்து செல்கிறேன். அதனால் நீ வீட்டிற்கு போ” என்று சொல்ல லக்ஷ்மியும் கிளம்புகிறாள்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த கவிதா, கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்த செழியணிடம் இன்று என் மகளை பெண் பார்க்க வருகிறார்கள் அதனால் கொஞ்சம் நேரமாக வந்துவிடு.
சரி வந்துவிடுகிறேன் என்று சொல்லிட்டு கடைக்கு கிளம்புகிறான்.
தன் அப்பாவிடமும் சொல்லுகிறாள்.
அவரும் நானும் சீக்கிரமே வருகிறேன். நீ தேவியிடம் சொன்னாயா இந்த விஷயத்தை என்று கேட்டார்
உடனே கவிதாவும் இனிதான் அவளிடம் சொல்ல வேண்டும்.
நீ முதலில் உன் தம்பி மனைவியிடம் தான் சொல்ல வேண்டும் என்று சொல்ல கவிதாவின் முகமோ மாறுகிறது.
மாடியை சுத்தம் செய்து கொண்டிருந்த தேவியிடம் வந்து “கவிதா இன்று மாலை வீட்டுக்கு வந்து விடு .”
“எதற்கு சித்தி” என்று கேட்க?
“ஏன் காரணத்தை சொன்னால்தான் வருவாயா? வீட்டிற்கு வா என்றால் வர மாட்டாயா?”
“சரி சித்தி நான் வருகிறேன்” என்று சொல்லி முடிக்கிறாள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
  • ஷண்முக பூரண்யா. அ

2 Comments

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!