120
அடுத்த நாள் காலை விடிகிறது.
வழக்கம்போல் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறாள் லட்சுமி.
மாலையில் நடக்கவிருக்கும் ஏழாம் மாதம் பூச்சூட்டு விழாவுக்காக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
தன் மகள் நடத்துவதால் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து வேலை பார்க்கிறாள்.
தாய் வாங்கி வந்த பொருட்களை தான் வாங்கியது போல் வீட்டிற்கு எடுத்து வருகிறாள் கவிதா.
அவளும் ,லட்சுமியும் சேர்ந்து பக்கத்தில் உள்ள உறவினர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள்.
லட்சுமி தேவியின் அப்பா அம்மாவையும் அழைக்கிறாள்.
அவர்களும் மகளுக்காக பழம் , பூ ஆகியவற்றை வாங்கி வருகிறார்கள்.
வந்தவர்களை வா என்று சொல்லாமல் கண்டும் காணாத போல் இருக்கிறாள் கவிதா.
உள்ளிருந்து வந்த லட்சுமி இவர்களைப் பார்த்ததும் வாங்க என்று கூறிவிட்டு அவளுடைய வேலையை பார்க்க செல்கிறாள்.
இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அவமதிக்க தொடங்குகிறார்கள்.
இதைப் பார்த்ததும் தேவியின் தாய் “ஏங்க எதுவும் பேசாதீங்க நம் மகள் வாழ்கின்ற வீடு அதனால் அமைதியாய் இருந்து விட்டு செல்லுவோம்.”
“நானும் அதையே தான் நினைக்கிறேன். “என மனம் நொந்து சொல்கிறார்.
வெளியிலிருந்து வந்த செழியன் மற்றும் சரவணன் அவர்களைப் பார்த்து “எப்போ வந்தீங்க?
சாப்பிட்டீங்களா? வந்து உட்காருங்கள்.”
என்று மரியாதையுடன் அழைக்கிறார்கள்.
இவர்களது முகத்திற் காவது சிறிது நேரமாவது இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தேவியின் பெற்றோர்.
சிறிது நேரத்தில் சடங்கு தொடங்குகிறது.
நலுங்கு வைத்த பின்பு வந்த அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது.
தேவியின் தாய் தந்தை இருக்க இவர்களை கண்டும் காணாததும் போல் கவிதாவும் , லட்சுமியும் நடந்துகொள்கிறார்கள்.
மாப்பிள்ளை வந்து ” என்ன மாமா நீங்க சாப்பிடலையா? என்று கேட்க
“இல்லப்பா பயணம் செய்தது ஒரே அலுப்பா இருக்கு அதனால அப்புறம் சாப்பிடலாம்” என தட்டிக் கழிக்கிறார் தேவியின் தகப்பனார்.
இதை பார்த்துக்கொண்டிருந்த தேவி மனம் வருந்துகிறாள்.
சொல்லவும் முடியாமல் மனதில் உள்ளே அழுத்தி அனைவரும் முன் சிரிப்பது போல் சமாளிக்கிறாள்.
நலுங்கு வைத்தபிறகு கடைசியாக நாத்தனாரை , வீட்டு மருமகள் உணவு சாப்பிட அழைக்க வேண்டும் இதற்கு மிகவும் பிடிவாதமாக தேவி கூப்பிடக் கூப்பிட காது கேட்காதது போல் வயிற்றுப் பிள்ளைக்காரி என்றும் பார்க்காமல் ஒரு ஒரு இடத்திற்காக நகர்ந்து கொண்டே இருக்கிறாள்.
இவளும் நாத்தனார் என்று ஒவ்வொரு இடம் சென்று போய் அழைக்க இவள் காது கேட்காதது போல் கண்டுகொள்ளாமல் இருக்கிறாள்.
இவள் கூப்பிடுவதை கவனிக்காத லட்சுமி நாத்தனாரை போய் சாப்பிட கூப்பிட்டு வா !
நாத்தனாரை எப்பொழுதும் மனதளவில் கஷ்டப்படுத்தி விடக்கூடாது. அப்படி அவள் கண் கலங்கினாள் குடும்பம் நன்றாக இருக்காது. என்று மாமியார் கூறிய அறிவுரை இவள் மனதை புண்பட வைக்கிறது.
நாத்தனார் திமிரை கொஞ்சம் கொஞ்சமாக காட்ட தொடங்குகிறாள். கவிதா
நிகழ்ச்சி முடிந்ததும் தேவியின் பெற்றோர் ஊருக்கு கிளம்புகிறார்கள்.
கவிதாவும் அவளது வீட்டிற்கு குழந்தைகளை அழைத்து செல்கிறாள்.
உடனே தாய் லட்சுமி ஓடிவந்து “நேரமாகிவிட்டது மா குழந்தைகளுடன் இன்றிரவு இங்கேயே தங்கி விடு” என்று சொல்ல
“பரவாயில்லை அம்மா நான் வீட்டில் போய் உறங்குகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.
தேவி மற்றும் செழியன் உறங்க அவர்களது அறைக்கு செல்கிறார்கள்.
தேவி நிகழ்ச்சியில் நடந்த விஷயத்தை சொல்வதற்கு முன்னரே செழியன் பேச ஆரம்பிக்கிறான்.
இப்பொழுதுதான் வீடு வீடு போல் உள்ளது.
வீட்டில் அக்காவும் பிள்ளைகளும் வந்த பிறகுதான் மகிழ்ச்சியாய் இருக்கிறது என்று கூற அவள் பேச வந்த வார்த்தையை மென்று விடுகிறாள்.
அவளும் உறங்க செய்கிறாள்.
மீண்டும் நாளை சந்திப்போம்
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment