இந்தியா

மம்தா சகோதரி அழைத்ததால் நான் வந்தேன்.. 7 வருடத்துக்கு பிறகு மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த சிகா மித்ரா

53views

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிகா மித்ரா 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார்.

மேற்கு வங்க காங்கிரஸின் முன்னாள் தலைவர் மறைந்த சோம் மித்ராவின் மனைவி சிகா மித்ரா. இவர் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆவார். 2014ம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சவுரிங்கீ சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் (எம்.எல்.ஏ. பதவி) பதவியை ராஜினாமா செய்து விட்டு அந்த கட்சியிலிருந்து விலகினார்.

இந்த சூழ்நிலையில், சிகா மித்ரா நேற்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு சிகா மித்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மம்தா பானர்ஜி சகோதரி என்னை அழைத்ததால் நான் இங்கு வந்தேன். சமுதாய நலனுக்காக ஏதாவது பெரிய காரியத்தை செய்ய, மக்களுக்கு சேவை செய்வதை இலக்காக கொண்ட ஒரு கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மக்கள் நலனுக்காக திரிணாமுல் காங்கிரஸ் பணியாற்றுகிறது. பா.ஜ.க. ஒரு மதவாத கட்சி. என் நாடு ஒரு ஜனநாயக நாடு. மக்களை பிரிப்பதற்காக வேலை செய்யும் ஒரு கட்சிக்கு என்னால் செல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!