சினிமா

விஷாலின் அடுத்த படம் வீரமே வாகை சூடும்.. இணையத்தை கலக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

118views

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, து.பா சரவணன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் ஆகியவை உருவாகி வருகின்றன.

து.ப சரவணன் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் வீரமே வாகை சூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதி நடிக்கிறார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!