கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை : 8

269views
நீண்ட நெடுங்காலத்திற்கு கைகோர்த்துத் திரியும் காதலோ? நட்போ?,இவர்களுக்கிடையேயான ஆழமான புரிதலென்பது   தனிப்பட்ட  விருப்பு,வெறுப்பு களில் ஒருவருக்கொருவர் தலையீடின்றி ஒதுங்கியிருத்தல் தான்.
வரையறுக்கப்பட்ட எல்லையில் வகுத்துக்கொண்ட  சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிப்பின்றி சம்பந்தப்பட்ட இருவரிடமும் தொடர்ந்துக் கொண்டிருக்கலாம்  .
ஆனால்,சிலரின்  அன்பு தன் சுயம் தொலைத்து  அதிகாரம் என்றளவிற்கு மாறும் போது  வேண்டா வெறுப்பாகி ,ஒரு கட்டத்தில் வேண்டாமென்றே விட்டு விலக வழி தேடும். இது இயல்பானாலும் செயலாவதற்கு அத்தனை எளிதல்ல .  பெரும் வலியையும் ,லிட்டர் கணக்கு கண்ணீரையும் விலையாகப் பெற்றபின்புதான் அது சாத்தியமாகிறது.
‘நீ எனக்குரியவள் என்பது நாளடைவில் எனக்கு அடிமையானவள்’ என்று பரிணாமம் கொள்ளுமாயின் ,அங்கு வதைத்துக் கொல்லப்படுகிறது ஒரு உயிரின் உணர்வென்று சொன்னாலும் சரிதான் இல்லையா..?
  • கனகா பாலன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!