சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி- 8

241views
இவர்களுடைய அன்பான வாழ்க்கை சிறிது காலம் அப்படியே நகர்கிறது…..
எப்பொழுதும் போல தேவி காலையில் எழுந்து மாமியார் லட்சுமிக்கு துணையாக சமையலறையில் வேலை பார்க்கிறாள்.
அப்போது லக்ஷ்மிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
அதில் எதிர்திசையில் இருப்பவர் லட்சுமியின் மூத்த மகள் இவள் ” காதல் திருமணம் செய்து அப்பா, அம்மா சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்” அதிலிருந்து இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை….
இது தெரியாத லட்சுமி தொலைபேசியை எடுத்து ” ஹலோ ” யார் என்று கேட்க அம்மா நான் கவிதா பேசுகிறேன். என்று சொல்ல வார்த்தை இல்லாமல் தவித்துப் போனாள் லட்சுமி.
“எப்படி இருக்க மா” என்று கேட்கத் துடிக்கும் லட்சுமியின் மனது ஆனால் “இவ்வளவு நாளா நீ எனக்கு ஒரு தொலைபேசி ஒரு வார்த்தையாவது பேசி இருப்பியா ” என்ற கோபம் அவளுள் மனதில் தீயாய் எரிந்தது.
இருப்பினும் பதில் பேசாமல், கண்களின் ஓரம் கண்ணீருடன் அமைதியாய் இருந்தாள்.
“அம்மா பேச மாட்டியா சொல்லுமா” என்று கேட்க
“அம்மா இப்போ உன் மகளுக்கு வெறும் உயிர் மட்டும்தான் இருக்கு மற்றபடி நான் ஒரு பிணம்” என்று சொல்ல துடிதுடித்து போன லட்சுமி “என்ன ஆச்சுடி????”
“எப்படி இந்த வார்த்தையை சொல்லுவ உங்க அம்மா உயிரோடு இருக்கும்போது , இனி நீ அப்படி பேசக்கூடாது நான் இருக்கேன் நீ வா” என்று சொன்னதும்,
“வேண்டாமா! ….நான் யாருக்கும் பாரமாய் இருக்க விரும்பல
உன் கூட பேசணும் தோணிச்சு இத்தனை வருஷம் கழிச்சு ….அதான் உன்னிடம் பேசினேன் மா” என்று சொல்ல.
“நீ வா உன்ன நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்கிறார் லட்சுமி.
சிறிது நேரம் அப்படியே இருவருக்கும் பேச
“அப்போ எனக்கு வேறு ஒரு வீடு பாருமா நான் அங்கேயே வந்துடறேன் மத்ததெல்லாம் நேரா பார்க்கும்போது சொல்றேன். “சொல்லிட்டு அழைப்பை வைக்கிறாள். கவிதா
இந்த உரையாடலைப் பார்த்துக்கொண்டிருந்த தேவிக்கு ஒன்றும் புரியாமல் முழித்தாள்.
சிறிது நேரம் கழித்து அமைதியாய் இருந்து லட்சுமி தேவியிடம் சொல்கிறாள்.
“இப்போ நான் யாரிடம் பேசினேன் தெரியுமா! உன்னோட நாத்தநாரிடம்” என்று சொல்ல….
“எந்த நாத்தனார் அத்தை” என்று கேட்க??
“என்னோட மகள் கவிதா” என்று சொல்கிறாள் லட்சுமி.
அதிர்ச்சியாய் பார்த்திருந்தாள் தேவி. “எனக்கு ஒன்றும் புரியவில்லை அத்தை என்று சொல்ல….”
கவிதா, செழியனின் அக்கா.
அவள் காதல் திருமணம் எங்கள் சம்பந்தமில்லாமல் செய்ததால் நாங்கள் யாரும் அவளிடம் பேசாமல் இருந்தோம்..
இப்போது என் மகளே என்னிடம் வந்து விட்டாள் என்று ஆனந்தமாக சொல்கிறாள் லட்சுமி.
இவளும் சிறு பேதை போல் “சரிங்க அத்தை சித்தி எப்போ வருவாங்க…..”
சந்தோஷமாக கேட்கிறாள்.
“இன்னும் ஒரு வாரம் என் மகள் வந்து விடுவாள்”.
என்று கூறிய லட்சுமி மீண்டும் சமையல் வேலையை சந்தோஷமாக செய்ய தொடங்கினாள்.
கடை வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழையும் செழியன்.
தேவி……….
தேவி……….
என்று குரல் கொடுத்து கொண்டே தேவி இருக்கும் அறையில் வந்து தேவியை பின்பக்கமாக அணைக்கிறான்…
என்ன சமைச்ச தேவி என்று கேட்க
“இன்று உங்களுக்கு பிடித்த மீன் குழம்பும் மீன் பொரியலும் “என்று சொல்கிறாள்.
” சரி போய் உணவு எடுத்து வை” என்று சொல்லி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்கிறான்.
அவளும் ஆசையாய் இவன் கன்னத்தைக் கிள்ளிவிட்டு போகிறாள்.
சிறிது நேரத்திலேயே மாமனாரும் வருகிறார்.
இருவருக்கும் உணவு பரிமாறப்படுகிறது.
லட்சுமி உணவு முடித்தபின் இருவருடனும் பேச முற்படுகிறாள்.
உங்க ரெண்டு பேரிடமும் ஒரு விஷயம் சொல்லணும்.
என்னவென்று இருவரும் கேட்க???
கவிதா எனக்கு அலைபேசியில் அழைத்து இருந்தாள்.
அவள் இனிமேல் நம் அருகிலேயே தான் இருக்கப் போகிறாள் என்று சொல்ல….
இருவருக்கும் அதிர்ச்சி!!!!!!!!
அவள் நம் குடும்பம் வேண்டாம் என்று விட்டு சென்றவள் அவளை எதற்கு?
இப்போது நம் அருகில் வர வேண்டும்.
இருவரும் கேட்க அழுதபடியே ஏன் நான் எதுவும் முடிவு எடுக்கக் கூடாதா எனக்கு என் மகளைப் பார்க்க உரிமை இல்லையா???
என்று கேள்விகள் கேட்டு அழுதபடியே அவள் அறையில் போய் உறங்குகிறாள் லட்சுமி.
வீடு நிசப்தமாக மாறி அனைவரும் அவரது அறையில் உறங்க செல்கிறார்கள்..
பார்க்கலாம் அவளது நாத்தனாரின் குணத்தை……..
  • ஷண்முக பூரண்யா . அ

4 Comments

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!