உலகம்உலகம்செய்திகள்

சிறையில் உள்ள முன்னாள் அதிபர்.. தற்கொலை முயற்சி.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

67views

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இடைக்கால அதிபராக 2019ஆம் ஆண்டு முதல் 2020 வரை பணியாற்றியவர் ஜெனீன் அனீஸ். இவர் 2019 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த இவோ மொரலீசின் ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. இதனால் இந்த நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அனீஸ் கைது செய்யப்பட்டார். மேலும் இவோ மொரலீசின் ஆதரவாளர்கள் ஜெனீன் அனீஸ் இடைக்கால அதிபராக இருந்தபோது போராட்டம் நடத்தினர். அவர்களை ஜெனீன் அனீஸ் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்பு படையினர் தாக்கினர். அதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜெனீன் மீது தற்போது இனப்படுகொலை வழக்கும் பதிவு செய்ப்பட்டது.

இருப்பினும் அவர் தன் மீது சுமத்தப்பட்ட இனப்படுகொலை குற்றத்தை மறுத்து வந்தார். இந்த நிலையில் சிறையில் உள்ள ஜெனீன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியானது. மேலும் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த மனவேதனையின் காரணமாக கையை அறுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தற்கொலை முயற்சியில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவரின் உடல் நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!