232
புதுச்சேரிக்கு சுற்றுலா வருகிறவர்கள் ஆரோவில் செல்லாமல் திரும்புவது அரிது. அதிலும் அயலக மனிதர்களின் சொர்க்கபுரி என்று சொல்லவேண்டும்.. உயர்ந்து வளர்ந்திருக்கும் மரங்கள் ..செந்நிறமான மண்… பரந்து விரிந்த பகுதி …அமைதியான சூழல்… ஆரோக்கியமான காற்று என அவர்களுக்கு பிடித்த அத்தனையும் அங்கே கிடைக்கும் போது விட்டு விடுவார்களா என்ன ?
இப்போது நிறைய விரிவடைந்து போகின்ற வழியெல்லாம் கடைகள் உணவகங்கள் தங்கும் இடங்கள் என எல்லாமே மனதிற்கும் கண்களுக்கும் ரம்மியம் தான் இப்படித்தான் துவங்கப்பட்டு இருக்கிறது ஜாலி கிச்சன்.ஜாலி ஹோம் இல்ல குழந்தைகளின் வளர்ச்சிக்காக சுய சார்புடன் தையலகம் கைவினைப் பொருட்கள் உற்பத்தி என ஆரம்பித்து ஜாலி கிச்சனில் நிறைவடைந்திருக்கிறது.
ஆரோவில் செல்லும் வழியில் குயிலாபாளையத்தில் ஸ்டேட் வங்கி அருகே இருக்கிறது ஜாலி கிச்சன் .கீழே ஜூஸ் ,டீ போன்றவையும் மேலே முதல் மாடியில் உணவகவமும் செயல்படுகிறது.. உள்ளே நுழைந்ததும் மனதிற்குள்ளே உள்ள கலாரசிகன் கண் விழித்துக் கொள்ள அமர்ந்து சாப்பிடுவதைவிட உணவகத்தின் அழகையும் பாரம்பரிய பொருட்களின் வரிசையையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது ..மூங்கில் மரங்கள் தடுப்புச் சுவர்களாக மிகப் பெரிய பாராங்கல் கைகழுவும் பேசினால் செடி கொடிகளோடு நம் மனதை கொள்ளை அடிக்கிறது புதுமையும் பழமையும் கலந்த ஏதோ ஒரு நாட்டிற்குள் நுழைந்து விட்டோமோ என நினைக்கும் போதே பாஸ்தா நூடுல்ஸ் பிரியாணி என சகலமும் நவீனம் தான்.
வாடிக்கையாளர்களின் வருகை கேற்ப பல நாட்டு உணவு வகைகள் ..நண்டு மீன் இறால் சுறா கோழி ஆடு கணவாய் என எண்ண வேண்டும்? எப்படி வேண்டும் ?சொன்னால் போதும் அரை மணி நேரத்தில் சுடச்சுட உங்கள் டேபிளில்… சாப்பிட வேண்டியதுதான்! ஜாலி ஹோம் இல்லத்தில் தங்கிகேட்டரிங் படித்த மாணவர்களும் ஆரோவில் செஃப்பும் இணைந்து உணவை தயாரித்து வழங்குகின்றனர் .
இனி ஆரோவில் சுற்றி பார்க்க வரும்போது அவசியமாய் ஜாலி கிச்சனுக்கு ஜாலியாய் வாருங்கள்.. இதன் வரவு முழுவதும் ஜாலி இல்ல குழந்தைகளின் கல்விக்கு என்ற உயர்ந்த சிந்தனையும் இணைவதால் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது நிச்சயமாய்.
-
கலாவிசு
add a comment