உலகம்உலகம்செய்திகள்

இலங்கையில் ஆதிக்கம் செலுத்துகிறதா சீனா? பல ஆயிரம் கோடி ரூபாய் கடனாக அளித்து பாசம் !!

69views

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவுக்கு மிக அருகில் அதாவது தமிழகத்தின் அருகே சீனா பெரும் துறைமுகத்தை அமைத்து கப்பல்களை நிறுத்தியுள்ளது. இதற்கு இலங்கை ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6,150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இலங்கையின் கோரிக்கை வைத்ததால் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலம் முதல், நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக ஆளும் தரப்பு தெரிவித்து வருகிறது. இலங்கையின் பிரதான வருமான வழியான சுற்றுலாத்துறை, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய வருமான வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நிய செலாவணி வருமானங்களும் குறைவடைந்துள்ளன. இதனால், பொருளாதார வீழ்ச்சிகளை சந்தித்து வருவதால் கடன் பெறுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு வரி வருமானங்கள் குறைவடைந்து, ஏற்றுமதி குறைவடைந்து, சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, அரசாங்கத்தினால் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களின் அளவு அதிகரித்துள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் தொகைக்கு வட்டி வீதம் அதிகம் எனவும், குறுகிய காலத்தில் இந்த கடனை செலுத்த வேண்டும், இல்லையெனில் நாட்டிலுள்ள சொத்துகளை சீனாவிற்கு எழுதி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே இந்த கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தக் கடனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற விமர்சனத்தை மறுத்துள்ள இலங்கை அரசு வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவே கடன் வாங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!