இளையோருக்கான உலகத் தடகளப்போட்டியில் 10 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
கென்ய தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போட்டியில் கென்ய வீரர் ஹெரிஸ்டோன் 42 நிமிடம் 10 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.
அவரைவிட 7 நொடிகள் பின்னால் வந்த இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அதாவது பந்தைய தூரத்தை 42 நிமிடம் 17 வினாடிகளில் அடைந்தார்.
உலக தடகளப்போட்டி நடைப்பந்தயத்தில் இந்தியா இப்போது தான் முதல்முறையாக பதக்கம் வென்றுள்ளது என இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் உலகத் தடகளப்போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா வெண்கலம் வென்ற நிலையில் தற்போது நடைப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.