80 சதவீதத்துக்கும், 20 சதவீதத்துக்கும் இடையே நடப்பதுதான் உ.பி. தேர்தல்: ஆதித்யநாத் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம்
உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் தேர்தல் என்பது, 80 சதவீதம் பேருக்கும், 20 சதவீதம் பேருக்கும்இடையிலான தேர்தலாக இருக்கும்.
இதில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 80 சதவீதம் பேர் இந்துக்களும், 20 சதவீதம் பேர் மட்டுமே முஸ்லிம்களும் உள்ளனர். இதை சுட்டிக்காட்டி ஆதித்யநாத் பேசியுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ம் ேததி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் முன், தூர்தர்ஷன் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் ‘ உ.பி.யில் நடக்கும் சட்டப்பேரைவத் தேர்தல் என்பது 80 சதவீதத்துக்கும், 20 சதவீதத்துக்கும் இடையிலான தேர்தல்.
80 சதவீத ஆதரவாளர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள், 20 சதவீதம் பேர் மற்றொருபுறம்இருக்கிறார்க்ள். 80 சதவீதம் பேர் சாதகமான மனநிலையுடன் முன்னோக்கி நகர்வார்கள், 20 சதவீதம் பேர் எதிர்மனநிலையுடன் உள்ளனர், தொடர்ந்து எதிர்க்கிறார்கள். இதில் பாஜகதான் வெல்லும், மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும்’ எனத் தெரிவித்தார்.
ஆதித்யநாத் பேச்சுக்கு சமாஜ்வாதிக்க ட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சமாஜ்வாதிக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில் ‘ 80 சதவீதம், 20 சதவீதம் என்று ஆதித்யநாத் பேசியது என்பது ஏதோ வகுப்புவாத நிறத்தை பூசுவதுபோலாகும், இதை மக்கள் கருத்தில்கொள்ள மாட்டார்கள்.
தேர்தலில் இந்து, முஸ்லிம் எனும்பேச்சுக்கே இடமில்லை, ஜனநாயகத்தைக் காக்க மக்கள் வாக்களிப்பார்கள்
பாஜக தேர்தலில் வாங்கப்போகும் வாக்கு சதவீதத்தை முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். அதாவது பாஜக 20 சதவீதமும், மற்ற கட்சிகள் 80 சதவீதம் வாக்குகள் வாங்குவதைத் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்துள்ளார்கள்’ எனத் தெரிவித்தார்
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் எல் பூனியா கூறுகையில் ‘ வகுப்புவாதம், பிரிவினைவாதத்தைவைத்துதான் பாஜக எப்போதும் அரசியல் செய்கிறது. வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை. ஆனால், 80 சதவீதம் மற்றும் 20 சதவீதம் பற்றியும் பேசுகிறார்கள். முதல்வர் பேசியது தோல்வியை ஒப்புக்கொண்டது போல் இருக்கிறது. இந்து முஸ்லிம் விவகாரத்தை பாஜக எழுப்புகிறது அதற்கு பலன் கிடைக்காது’ எனத் தெரிவித்தார்.